நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்.

கயிறு, பானை உடைத்தல், விளையாட்டு போட்டிகளில்மாமன்ற உறுப்பினர்கள் அலுவலக பணியாளர்கள் பங்கேற்பு...

தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் இன்று பொங்கல் விழாவானது கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நாமக்கல் மாநகரட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழாவானது நடைபெற்றது. விழாவில் மாநகராட்சி ஆணையர் சிவக்குமார், மேயர் கலாநிதி, துணைமேயர் பூபதி, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகரராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் பாரம்பரிய முறையில் சேலை,வேட்டி அணிந்து அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர். நிகழ்ச்சியில் பானை உடைத்தல்,பலூன் ஊதும் போட்டி, கயிறு இழுத்தல், இசை நடனம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. மேலும் இசை நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உற்சாகமாக விளையாடினார். பின்னர் சமத்துவ பொங்கல் விழாவில் மாநகராட்சி ஆணையர் சிவக்குமார், மேயர் கலாநிதி ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கியும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Next Story