பொங்கல் பொருட்கள் விற்பனை தீவிரம்

குமாரபாளையத்தில் பொங்கல் பொருட்கள் விற்பனை தீவிரமாக நடைபெற்றுவருகிறது
குமாரபாளையத்தில் பொங்கல் பொருட்கள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று பொங்கல் விழாவையொட்டி குமாரபாளையம் மார்க்கெட்டில் கரும்புகள், மஞ்சள் கொம்புகள், காப்பு கட்டுதல் செடிகள், பானைகள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்கும் கடைகளில் பொதுமக்கள் ஆர்வமுடன் பொருட்கள் வாங்கினர். வழக்கத்தை விட மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பொங்கல் பொருட்களுக்கான கடைகள் அதிகம் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் எளிதில் வாங்க முடிந்தது. பொதுமக்களுடன் கல்வி நிறுவனங்களில் கொண்டாடப்படும் பொங்கல் விழாவிற்காக பொங்கல் பானைகளை மாணவ, மாணவியர் வாங்கினர்.
Next Story