நாமகிரிப்பேட்டை கிராமங்களில் பொள்ளாச்சி வானவராயர் வேளாண் கல்லூரி மாணவிகள் கள ஆய்வு!

X
Namakkal King 24x7 |28 Jan 2026 4:35 PM ISTஇந்த கள அனுபவம், நடைமுறை அறிவை வளர்ப்பதுடன்,வருங்கால வேளாண் வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவும் என மாணவிகள் தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை பகுதியில் பொள்ளாச்சி வானவராயர் வேளாண்மை கல்லூரி நான்காம் ஆண்டு மாணவிகள் ஐஸ்வர்யா, ஆர்த்தி, ரமா, நந்தனா, லாவண்யா, ஜனாஶ்ரீ, சுவேதா, திவ்யா, சங்கமித்திரா, ஶ்ரீநிதி ஆகியோர் கிராமப்புற வேளாண்மை அனுபவ திட்டத்தின் கீழ் தங்கி களப்பணியாற்றி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி வானவராயர் வேளாண் கல்லூரி மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் நாமகிரிப்பேட்டை, அரியாகவுண்டன்பட்டி, மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்கி களப்பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.இதில் விவசாயிகள் மற்றும் கிராம மக்களுக்கு கிராம விரைவு ஊரக ஆய்வு நிகழ்ச்சி, ஆய்வின் மூலம் குறைந்த காலத்தில் கிராமத்தின் நிலைமைகள்,தேவைகள் சிக்கல்களை அறியும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.மேலும் கிராமத்தின் வளங்கள் மற்றும் குறைகளை வரைபடம்,கலந்துரையாடல் மற்றும் நேர்காணல் மூலம் சேகரித்தனர்.கிராம வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் வரைபடம்,பயிர்பட்டியல், பகுப்பாய்வு வரைபடம் மூலம் ஆய்வுக்கூறுகளை வரைந்து குறைகள் குறித்து எடுத்துரைத்தனர். இந்த நிகழ்வில் விவசாயிகள் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
