ஞானமணி கல்வி நிறுவனங்கள் சார்பில் சர்வதேச புற்றுநோய் தின விழிப்புணர்வு..

X
Rasipuram King 24x7 |4 Feb 2026 10:09 PM ISTஞானமணி கல்வி நிறுவனங்கள் சார்பில் சர்வதேச புற்றுநோய் தின விழிப்புணர்வு..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஞானமணி கல்வி நிறுவனங்கள் சார்பில் சர்வதேச புற்றுநோய் தினம் புதன்கிழமை கடைபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் 2,500 மாணவர்கள் ஒன்றிணைந்து புற்றுநோய் இலட்சியினையான ரிப்பன் வடிவத்தை உருவாக்கினர் அமர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ மாணவியர்களிடையே விழிப்புணர்வு மேற்கொண்டனர். புற்று நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால் தீர்க்கக்கூடியது தான் என்பதை எடுத்துக்கூறினர். பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடனும் கட்டுப்பாட்டுடனும் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நிறைவேற்றினர். மாணவர்களின் சமூகப் பொறுப்புணர்வையும் மனிதநேயத்தையும் ஞானமணி கல்வி நிறுவனத்தின் தலைவர் தி. அரங்கண்ணல், தாளாளர் பி. மாலாலீனா, துணை தாளாளர் மதுவந்தினி அரங்கண்ணல், முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் பி. பிரேம்குமார், ஞானமணி தொழில்நுட்ப கல்லூரியின் செயல் இயக்குநர் முனைவர் எம்.மாதேஸ்வரன், முதல்வர் பி. சஞ்சய் காந்தி, துணை முதல்வர்கள் பாலகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டினர்.
Next Story
