ராசிபுரம் அருகே பத்திரகாளி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு திமுக மருத்துவ அணி சார்பில் பொதுமக்கள் பக்தர்களுக்கு இலவச தண்ணீர் பாட்டில் வழங்கினர்..

X
Rasipuram King 24x7 |4 Feb 2026 10:26 PM ISTராசிபுரம் அருகே பத்திரகாளி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு திமுக மருத்துவ அணி சார்பில் பொதுமக்கள் பக்தர்களுக்கு இலவச தண்ணீர் பாட்டில் வழங்கினர்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கோனேரி பட்டி மேட்டுக்காடு பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவில் உள்ளது. திருக்கோவிலில் புதன்கிழமை எருமைக் கிடா வெட்டும் நிகழ்ச்சி மற்றும் அக்கினி குண்டம் இறங்கும் நிகழ்வு நடைபெற்றது.. ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும் இந்த பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் பல்வேறு தரப்பினர் பொதுமக்கள் பக்தர்களுக்கு இலவச அன்னதானம் குடிநீர் பாட்டில்கள் விநியோகித்து வருகின்றனர். அதன்படி நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என். ராஜேஷ்குமார் எம்பி அவர்கள் ஆலோசனைப்படி மாநில மருத்துவ அணி சார்பில் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு மாநில மருத்துவ அணி துணைச் செயலாளர் டாக்டர். எஸ். ராஜேஷ் பாபு, கழக மாவட்ட துணைத் தலைவர் சிவபிரகாஷ் ஆகியோர் இணைந்து பொதுமக்கள் பக்தர்களுக்கு இலவசமாக குடிநீர் பாட்டில்கள் வழங்கி சிறப்பித்தனர். இதில் அப்பகுதியைச் சேர்ந்த குணசேகரன், மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story
