கரூரில், காது கேளாதோர் மாற்றுத்திறனாளி மாணாக்கர்களுக்கு கல்வி உபகரணம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

கரூரில், காது கேளாதோர் மாற்றுத்திறனாளி மாணாக்கர்களுக்கு கல்வி உபகரணம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
கரூரில், காது கேளாதோர் மாற்றுத்திறனாளி மாணாக்கர்களுக்கு கல்வி உபகரணம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. கரூர் அடுத்த வெண்ணைமலை பகுதியில் செயல்படும் கண்மணி டிரஸ்ட் அன்பாலயம் காது கேளாதோர் சிறப்பு பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியின் தலைமையாசிரியர் கேத்தரின் ஸ்மித் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கரூரை அடுத்த தாந்தோணிமலை மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் பேங்க் சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். மேலும் இங்கு பயிலும் மாணாக்கர்களுக்கு மதிய உணவு,கல்வி உபகரணங்கள்,பிஸ்கட்,உடைகள் போன்றவற்றை வழங்கினார். உடன் கண்மணி டிரஸ்ட்,அன்பாலயம் காது கேளாதோருக்கான சிறப்பு பள்ளி ஆசிரியர்கள், மலர் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் பிரேமா,ஸ்வர்ணலதா,வான்மதி,யசோதா,அனுஷியாதேவி,யசோதை மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story