ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து கரூரில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து கரூரில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து கரூரில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்து இன்று தமிழக முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டத்தில் 29 இடங்களில் கரூர் மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கரூர் மாநகர திமுக சார்பில் கரூர் தலைமை தபால் நிலையம் அருகே மாநகர செயலாளர் கனகராஜ் தலைமையில் மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டில் தமிழக அரசுக்கு தேவையான நிதியை ஒதுக்காததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் திமுக மாநகர நிர்வாகிகள் மகளிர் அணியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மாநில சட்டத்துறை துணைச் செயலாளர் வழக்கறிஞர் மணிராஜ் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அதானிக்கும் அம்பானிக்கு மட்டுமே பயன்பெறும் பட்ஜெட்டாக இருப்பதாக கூறினார். இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Next Story