பத்திரப்பதிவில் பெண்களுக்கு 1% கட்டணம் குறைப்பு அமல்!

பத்திரப்பதிவில் பெண்களுக்கு 1% கட்டணம் குறைப்பு அமல்!
X
வேலூரில் பத்திரப்பதிவில் பெண்களுக்கு 1% கட்டணம் குறைப்பு அமல்படுத்தப்பட்டது.
பெண்கள் பெயரில் சொத்துக்கள் பத்திரப்பதிவு செய்யும்போது பதிவுக்கட்டணம் 1 சதவீதம் கட்டணம் குறைப்பு திட்டம் வேலூர் மாவட்டத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி, வேலூர் வேலப்பாடியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் பத்மபிரியா பெண்களுக்கு பத்திர பதிவு கட்டணத்தில் ஒரு சதவீதம் குறைப்பு செய்து திட்டத்தை தொடங்கி வைத்தார்.
Next Story