சங்கரன் கோவிலில் தக்காளியின் இன்று 1ரூபாய் முதல் 5ரூபாய் வரை விற்பனை

X

தக்காளியின் இன்று 1ரூபாய் முதல் 5ரூபாய் வரை விற்பனை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வாசுதேவநல்லூர் புளியங்குடி அதன் சுற்றுவட்டாரங்களில் இந்த வருடம் தக்காளி சாகுபடி செய்தனர் இந்த வருடம் அதிகப்படியாக கடுமையான வெயில் இருந்ததால் தக்காளியின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது மேலும் விவசாயிகள் நிலையும் கேள்விக்குறியான நிலையாகவே காணப்படுகிறது. விளைச்சல் ஒருபுறம் இருந்தாலும் அதற்கு ஏற்ற விலை இல்லாமல் விவசாயிகள் பெரும் கவலைக்கு உள்ளாக வேண்டிய நிலை காணப்பட்டது கடந்த 2022 ஆம் ஆண்டு இதே தக்காளி விளைச்சல் தென் மாவட்டங்களில் அதிகப்படியாக விளைச்சல் இருந்தும் விலையும் இருந்தது சுமார் 200 ரூபாய் வரை விற்பனையானதால் விவசாயிகள் பெரும் சந்தோஷத்தில் இருந்தன ஆனால் இந்த வருடம் தக்காளி விளைச்சல் அதிகப்படியாக சாகுபடி இல்லை என்றாலும் வெயிலில் தாக்கத்தினால் அதிகப்படியான பழங்கள் நல்ல நிலைமைக்கு வரவில்லை என விவசாயிகள் பெரும் கவலை அளித்துள்ளனர். அதேபோல் தென்காசி மாவட்டத்திற்குமழை உள்ளது என கூறினாலும் அதிகப்படியாக தென்காசி செங்கோட்டை இந்த பகுதியில் மட்டுமே மழை பெய்கிறது ஆனால் எங்களுடைய பகுதிக்கு மழை இல்லை என பெரும் கவலையோடு தெரிவித்து இருக்கும் விவசாயி. குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் மிகவும் கவலைப்படுகிறோம் விவசாயத்திற்கு எப்படிங்க ஐயா தண்ணீர் இருக்கும் என கேள்வி எழுப்பியது விவசாயிகளின் குமரலாக காணப்பட்டது. மேலும் இந்த ஆண்டு தக்காளி விளைச்சல் சிறிய ஓட்டை இருந்தாலும் ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய்க்கு எடுக்குறாங்க ஐயா அதை வைத்து நாங்க என்ன செய்யப் போறோம் 1 தக்காளி விலை அரிசி வாங்குவதற்கு80 ரூபாய்க்கு அரிசி வாங்க வேண்டிய நிலை உள்ளது. ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய்க்கு விற்பனை ஐந்து ரூபாய்க்கு விற்பனையானால் எப்படிங்க ஐயா வாங்கி சாப்பிட முடியும் என மிகுந்த கவலையோடு விவசாயி பகிர்ந்து உள்ளார். இந்த ஆண்டு தக்காளியின் விலை கடும் சர்வே சந்தித்துள்ளதால் பலரும் தக்காளியை தெருக்களிலும் அதே விவசாய இடத்திலே குமித்து வைத்து வீணாக வேண்டிய நிலை தக்காளி நிலை காணப்படுகிறது. ஒரு உணவிற்கு மிகவும் முக்கியமாக காணப்படுவது தக்காளி விவசாயிகள் இதை விவசாயம் செய்து சாகுபடி செய்து ஏற்ற விலை இல்லாமல் ஆங்காங்கே கொட்டி கெடுப்பதால் பெரும் கவலைக்கு ஆளாக வேண்டிய நிலை தக்காளி விவசாயி நிலை இந்த வருடம் காணப்பட்டது கண்ணீரில் இருக்கும் விவசாயிகளுக்கு தமிழக அரசு உதவி வேண்டுமென விவசாயிகளின் பெரிதான கோரிக்கையும் வைத்துள்ளனர். எது எப்படியோ இந்த வருடம் தக்காளி விலை குறைவாக உள்ளதால் விவசாயிகளின் நிலையும் பெரும் கவலைக்குரியதாகவே காணப்படுகிறது ஒரு கிலோ ஒரு ரூபாய் முதல் ஐந்து ரூபாய்க்கு விற்பனையாளதால் விவசாயிகள் ஏற்ற விலை இல்லாமல் விவசாய நிலத்தில் அப்படியே போட வேண்டிய நிலை காணப்பட்டுள்ளது. அரசாங்கம் நிவாரணம் ஒதுக்குமா விவசாயிகளின் கண்ணீர் விடை கிடைக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.
Next Story