இடிதாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.10லட்சம் வழங்கக்கோரி விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏற்றி ஆர்ப்பாட்டம்.

ஆரணி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற விவசாய சங்கம் சார்பாக இடிதாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.10லட்சம் வழங்கக்கோரி விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏற்றி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
.இடிதாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூ.5லட்சம் நிதி அறிவித்துள்ளது. இதனை ரூ.10லட்சமாக உயர்த்தி தருமாறு ஆரணி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடந்த வாரம் இயற்கை பேரிடரான இடிதாக்கி ஆரணி அடுத்த சென்னாத்தூர் லாடவரம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை ( 21. ) மற்றும் கலசப்பாக்கம் வட்டம் பத்தியவாடி கிராமத்தைச் சேர்ந்த வேண்டா (40) ஆகிய இருவரும் இடித்தாக்கி உயிரிழந்தனர். இதனையடுத்து உயிரிழந்த இருவருக்கும் உழவர் பாதுகாப்பு திட்ட நிதியும், மற்றும் தமிழக முதல்வர் அறிவித்த. 5 லட்சத்திற்கு பதிலாக 10 லட்சம் வழங்க வலியுறுத்தி கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வாக்கடை புருஷோத்தமன் தலைமையில் 30 க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று கூடி மெழுகுவர்த்தி ஏற்றி ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் இயற்கை பேரிடரால் இறந்த விவசாயி குடும்பத்தைச் சேர்ந்த ஏழுமலை, வேண்டா, ஆகிய இருவருடைய . திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
Next Story