நாமக்கல் மாவட்ட ஆட்சியர் 10-வது “படைவீரர் நாள்“ நிகழ்ச்சியில் படைவீரர் குடும்பத்தினரை கௌரவித்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாமக்கல் மாவட்டத்தில் போரில் வீரமரணமடைந்த படைவீரர்களின் வீரமங்கைகளான போர் விதவையர்கள் மற்றும் போரில் ஊனமுற்றவர்கள், வீர தீர செயல்களுக்காக வீர விருது பெற்ற முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் ஆகியோர் “படைவீரர் நாள்“ அன்று அழைத்து கௌரவித்து தேநீர் உபசரிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.கொடும் பனியும் கொடியகுளிரும் தாக்கும் பகுதிகள், கோடையின் வெப்பம் கொல்லும் இடங்கள், குண்டு மழைபொழியும் களங்கள் இவை அனைத்தும் உயிரைத் திரணமாக மதித்த வீர மறவர்கள் உலா வந்த புனித பூமிகள். "மரணம் மாவீரனுக்கு தரப்படும் மலர்ச் செண்டு" என்ற மனோபலத்தோடு படையில் அணி வகுத்துச் செல்வதை பிறந்த பொன்னாட்டிற்குச் செய்யும் கடமையாக நம் வீரர்கள் கருதினர். இவர்களில் எழில் இழந்தோர் ஊனமுற்றோர் ஏராளம். மாவீரர்கள் இதனை தங்கள் நாட்டின் பாதுகாப்பிற்காக தரப்பட்ட காணிக்கையாகவே கருதுகின்றனர். அந்த வீரர் தம் உயர்ச்சினைய் புகழ்வதும், போற்றுவதும் நன்றி தெரிவிப்பதும் நமது கடமையாம்.நமது பாரத திருநாட்டில் முப்படைகளில் பணிபுரிந்து அல்லும் பகலும் அயராது உழைத்து தாய் நாட்டிற்காக தனது இன்னுயிரை நீத்த படைவீரர்கள் மற்றும் உடல் ஊனமுற்ற படைவீரர்கள் நினைவாக அவர்களின் தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் Field Marshal Kariyappa அவர்கள் 1953 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றதன் நினைவு கூறும் வகையிலும் 2017ஆம் ஆண்டு முதல் படைவீரர் நாள் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் நாள் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இன்றைய தினம் 10 வது படைவீரர் நாள் நமது மாவட்டத்தில் அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்சியில் பங்கேற்றுள்ள நமது மாவட்டதைச் சேர்ந்த போர் மற்றம் போரையொத்த நடவடிக்கைகளில் வீரமரணம் அடைந்த மற்றும் உடல் ஊனமுற்ற படைவீரர்களுக்கு அவர்கள் செய்த தியாகத்திற்கு மரியாதை செலுத்துவதற்கும் அவர்களின் குடும்பத்தார்களை கௌரவிப்பதிலும் மிகுந்த பெருமிதம் அடைகிறேன்.நமது மாவட்டத்தைச் சேர்ந்த போர் மற்றும் போரையொத்த நடவடிக்கைகளில் வீர மரணம் அடைந்த மற்றும் உடல் ஊனமுற்ற படைவீரர்களுக்கு அவர்கள் செய்த தியாகத்திற்கு மரியாதை செலுத்துவதற்கு நாம் இங்கு கூடியிருக்கிறோம். அவ்வாறு போரில் ஊனமுற்ற மற்றும் போரில் வீர மரணம் அடைந்த படைவீரர் குடும்பத்தாருக்கு வருடாந்திர பராமரிப்பு மானியம் ரூ.25,000/- ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வீர மரணம் அடைந்த படைவீரர்களின் குடும்பத்தாருக்கும் உடல் ஊனமுற்ற படைவீரருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். மேலும், போரில் ஊனமுற்ற மற்றும் போரில் வீர மரணம் அடைந்த 4 படைவீரர் குடும்பத்தாருக்கு வருடாந்திர பராமரிப்பு மானியமாக தலா ரூ.25,000/- வீதம் ரூ.1.00 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குநர் (மு.கூ.பொ) மு.விஜயகுமார், முன்னாள் படைவீர்ர் வாரிய உபதலைவர் Sqn Ldr K.இராமசாமி உட்பட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பந்தார்கள் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



