தமிழ்நாடு ஆதி திராவிடர் நலத்துறை விடுதி ஊழியர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் - 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு...*

X

தமிழ்நாடு ஆதி திராவிடர் நலத்துறை விடுதி ஊழியர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் - 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு...*
விருதுநகரில் தமிழ்நாடு ஆதி திராவிடர் நலத்துறை விடுதி ஊழியர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் - 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு... விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு தமிழ்நாடு ஆதி திராவிடர் நலத்துறை விடுதி ஊழியர் சங்கம் சார்பாக மாநில பொதுச் செயலாளர் பாண்டியராஜன் தலைமையில் விருதுநகர் மாவட்டத்தின் முன்னாள் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் மற்றும் முன்னாள் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் ரமேஷ் ஆகியோர் அளித்த பாரபட்சமான அறிக்கையால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 35 ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் மாணவர் சேர்க்கை பதிவு செய்ய இயலாமல் ஆதிதிராவிடர் நல ஆணையளர் முடக்கி வைத்துள்ளார் என்றும், 5 கிலோ மீட்டருக்குள் வசிக்கும் மாணவர்களை விடுதிகளில் சேர்க்கக்கூடாது என்ற ஆணையாளர் வெளியிட்ட சுற்றிரிக்கையால் விடுதிகளில் மாணவர்களின் சேர்க்கை மிகவும் குறைந்துள்ளது எனவும், விருதுநகர் மாவட்டம் தவிர இதர மாவட்ட ஆட்சியர்கள் அளித்த அறிக்கையி அடிப்படையில் பிற மாவட்டங்களில் ஐந்து முதல் பத்து விடுதிகளை மட்டுமே மூடுவதற்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 56 விடுதிகளில் 35 விடுதிகள் மூடப்பட்டால் ஆதிராவி நலத்துறை மாணவர்களின் கல்வி வாய்ப்பு மறுக்கப்படும் மேலும் விடுதிகளில் பணிபுரியும் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்களின் குடும்பங்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும்) எனவே விருதுநகர் முன்னாள் மாவட்ட ஆட்சியரின் பாரபட்சமான அறிக்கையை திரும்ப பெற்று 56 விடுதிகளும் தங்கு தடையின்றி செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி, 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகத்தையும் மற்றும் தமிழக அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Next Story