ராசிபுரம் அருகே 100 ஆண்டுகளுக்கு மேலாக பத்திரகாளியம்மனுக்கு எருமைகிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தும் வினோத திருவிழா...

X
Rasipuram King 24x7 |4 Feb 2026 10:15 PM ISTராசிபுரம் அருகே 100 ஆண்டுகளுக்கு மேலாக பத்திரகாளியம்மனுக்கு எருமைகிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தும் வினோத திருவிழா...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மேட்டுக்காடு பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் திருக்கோவிலானது உள்ளது.இங்கு வருடம் தோறும் தை மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டு திருவிழா நடைபெற்ற நிலையில் பெண்கள் மற்றும் ஆண்கள் ஏராளமானோர் கன்னம், நாக்கு,முதுகு உள்ளிட்ட பகுதிகளில் அழகு குத்தி,கரகம் எடுத்துக் கொண்டும் ஊர்வலமாக சென்றனர்.பின்னர் ஊர்வலமாக சென்ற பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார். நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட 20-க்கும் மேற்பட்ட எருமைகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அதன் மீது தீர்த்த நீரை தெளித்து முதலில் துலுக்கும் எருமை கிடாவை கோவிலில் அருகாமையில் வெட்டப்பட்டிருந்த 6 அடி குழியில் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த வினோத திருவிழா கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. விழாவில் சுற்று வட்டார பகுதிகளான சேலம்,ஈரோடு,நாமக்கல்,ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 1000க்கும் மேற்பட்டோர் கண்டு அம்மன் அருள் பெற்று சென்றனர்...
Next Story
