கரூர்-அன்புமணி ராமதாஸ் கரூரில் மேற்கொள்ள உள்ள நடைப்பயணம் நிகழ்ச்சிக்கு -10,000- பேரை திரட்ட முடிவு.

கரூர்-அன்புமணி ராமதாஸ் கரூரில் மேற்கொள்ள உள்ள நடைப்பயணம் நிகழ்ச்சிக்கு -10,000- பேரை திரட்ட முடிவு.
கரூர்-அன்புமணி ராமதாஸ் கரூரில் மேற்கொள்ள உள்ள நடைப்பயணம் நிகழ்ச்சிக்கு -10,000- பேரை திரட்ட முடிவு. பாட்டாளி மக்கள் கட்சியின் கரூர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் கரூரில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. மேற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் பிரேம்குமார் நகர செயலாளர் ராக்கி முருகேசன் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் பசுபதி முன்னாள் எம்எல்ஏ மலையப்பசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்ட கூட்டத்தில் வன்னியர் சங்க மாநில செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான கார்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி இந்த மாதத்தின் இறுதியில் நாமக்கல் மற்றும் கரூரில் நடை பயணம் மேற்கொள்ள உள்ளார்.அதற்கான ஏற்பாடுகளை செய்யவும் வீடுகள்தோறும் திண்ணை பிரச்சாரம் செய்து உறுப்பினர் சேர்க்கை தீவிர படுத்த வேண்டும் எனவும் நடைப்பயணம் நிகழ்ச்சியில் பத்தாயிரம் பேர் கலந்து கொள்ள ஏற்பாடு செய்ய இந்த கூட்டத்தில் முடிவுசெய்துள்ளதாக தெரிவித்தார்.
Next Story