செப். 11ல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

செப். 11ல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
X
செப். 11ல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் சங்ககிரியில் நடக்கவுள்ளது. இது குறித்து செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி விடுத்துள்ள அறிக்கை
செப். 11ல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் சங்ககிரியில் நடக்கவுள்ளது. இது குறித்து செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மேட்டூர் மின் பகிர்மான வட்டம், சங்ககிரி கோட்டத்தில் மாதாந்திர மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் செப். 11ல் முற்பகல் 11:00 மணி முதல் 01:00 மணி வரை, செயற்பொறியாளர், இயக்கமும் பராமரிப்பும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், சங்ககிரி, அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளரால் நடத்தப்படவுள்ளது. சங்ககிரி கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story