சேலம் நெத்திமேட்டில் பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது

சேலம் நெத்திமேட்டில் பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது
X
போலீசார் நடவடிக்கை
சேலம் நெத்திமேடு சுற்று வட்டார பகுதிகளில் பணம் வைத்து சூதாடுவதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கே.பி.கரடு தென்புறம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள வீட்டில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த பழனி, பாபு, முரளி கண்ணன், நடராஜன், கோபி, சுப்ரமணி, குணசேகரன், கோபால், முருகேசன், வீரமணி, ராமு ஆகிய 11 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.11 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story