வெள்ளை விநாயகர் திருக்கோவிலில் 14 வகையான அபிஷேகங்கள்

வெள்ளை விநாயகர் திருக்கோவிலில் 14 வகையான அபிஷேகங்கள்
X
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திண்டுக்கல் அருள்மிகு வெள்ளை விநாயகர் திருக்கோவிலில் 14 வகையான அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அலங்கார ஆராதனை நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
இந்தியா முழுவதும் இன்று (07.09.2024) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு சிறப்பாக வருகிறது. அதில் ஒரு பகுதியாக திண்டுக்கல் நகர் பகுதியில் அமைந்திருக்கும் அருள்மிகு வெள்ளை விநாயகர் திருக்கோவிலில் கடந்த மாதம் 21ஆம் தேதி தொடங்கிய திருவிழாவானது பத்து நாள் நடைபெற்றது. திருவிழாவில் ஒவ்வொரு நாளும் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திருவிழாவின் முக்கிய நாளான விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு பால் , தயிர், பன்னீர், விபூதி, திருமஞ்சனம், தேன் , பஞ்சாமிர்தம், இளநீர் மற்றும் பல வகைகளால் விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பிறகு தங்க கவசம் சாத்தி பஞ்சமுக தீபாராதனை காட்டிய பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் அதிகாலை 4 முதல் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்து விநாயகர் அருள் பெற்று சென்று வருகின்றனர்.
Next Story