பரமத்தி ஒன்றியத்தில் கலைஞரின் கனவு திட்டத்தின் கீழ் 143 பயனாளிகளுக்கு ரூ.4.97 கோடியில் ஆணை.

பரமத்தி ஒன்றியத்தில் கலைஞரின் கனவு திட்டத்தின் கீழ் 143 பயனாளிகளுக்கு ரூ.4.97 கோடியில் ஆணை.
X
பரமத்தி ஒன்றியத்தில் கலைஞரின் கனவு திட்டத்தின் கீழ் 143 பயனாளிகளுக்கு ரூ.4.97 கோடியில் ஆணையை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வங்கினார்.
தமிழக அரசின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டமான கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கும் திட்டம் பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா தலைமை தாங்கினார். நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.மாதேஸ்வரன்,நகரமைப்பு மண்டல திட்டகுழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் 143 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 97 லட்சம் மதிப்பில் திட்ட ஆணைகளை வணங்கினார். அமைச்சர் பேசியதாவது: தமிழக முதலமைச்சர் ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் வீடு வழங்கிட வேண்டும் என்ற நோக்கத்தில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 3.50 லட்சம் மதிப்பில் வீடு கட்டும் திட்டத்தை அறிவித்திருந்தார். இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள அனைவருக்கும் வீடு கட்ட ஆணை வழங்கப்பட்டு வருகிறது. திட்டத்தில் கீழ் தகுதி உள்ள நபர்களை கள ஆய்வின் மூலம் நேரடியாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இத்திட்டத்தில் வீடு கட்டுவதற்கான தொகையை 3 தவணைகளாக நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. கூடுதல் தொகை தேவைப்படுவோருக்கு ஒரு கோடி வரை வங்கி கடன் உதவி வழங்கப்பட உள்ளது. அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் தகுதியுள்ள பயனாளிகளை விடுபடாத வகையில் தேர்வு செய்யப்பட்டு ஆணை வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலேயே அதிக பயனாளிகள் நாமக்கல் மாவட்டத்தில் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2001-ஆம் ஆண்டிற்கு முன் கட்டப்பட்ட ஓட்டு வீடுகள்,சாய்வு தள வீடுகளை மறுசீரமைக்க ரூ.75 ஆயிரம் முதல் ரூ.100 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது என நிகழ்ச்சியில் பேசினார். இந்நிகழ்ச்சியில் பரமத்தி ஒன்றிய செயலாளர் தன்ராஜ் உட்பட கழக தொழில்நுட்ப பிரிவு,ஊராட்சி,ஒன்றியம் நகர நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story