கிருஷ்ணராயபுரம் - டாட்டா ஏஸ் வாகனம் - தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து.15 பேர் காயம்.

கிருஷ்ணராயபுரம் - டாட்டா ஏஸ் வாகனம் - தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து.15 பேர் காயம்.
கிருஷ்ணராயபுரம் - டாட்டா ஏஸ் வாகனம் - தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து.15 பேர் காயம். கரூர் மாவட்டம், வெள்ளியணை தெற்கு,ஜல்லிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெரியார் தாசன் வயது 35. டாட்டா ஏஸ் வாகன டிரைவர். இவர் நேற்று மாலை 4 மணி அளவில் திருச்சி - சாலையில் அவரது வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகம் அருகே வந்த போது , எதிர் திசையில் கரூர் மாவட்டம், குளித்தலை , மேல வதியத்தை சேர்ந்த கண்ணன் வயது 39 என்பவர் வேகமாக ஓட்டி வந்த தனியார் பேருந்து , டாட்டா ஏஸ் வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பெரியார் தாசனுக்கும் மற்றும் தனியார் பேருந்தில் வந்த 14 பேருக்கும் காயம் ஏற்பட்டது. பெரியார்தாசனை குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக பெரியார் தாசன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் தனியார் பேருந்தை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய கண்ணன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் மாயனூர் காவல்துறையினர்.
Next Story