வீட்டில்  1.500 கிலோ கஞ்சா பறிமுதல் 

வீட்டில்  1.500 கிலோ கஞ்சா பறிமுதல் 
X
4 பேர் கைது
நாகர்கோவில், தளவாய்புரம் ஜான்போஸ் தெருவில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து நேசமணி நகர் போலீஸ் எஸ்ஐ விஜயன் தலைமையிலான போலீசார் அந்த வீட்டில் நேற்று சோதனை மேற்கொண்டனர். அதில் அந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1.500 கிலோ கிராம் கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அங்கிருந்த 4 பேரை கைது செய்து, காவல் நிலையத்தில் கொண்டு வந்து விசாரித்தனர்.       விசாரணையில் இவர்கள் தென்காசி பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (22), இசக்கி ராஜா (23) தங்கபாண்டியன் (27), குமரி மாவட்டம் பூதப்பாண்டியை சேர்ந்த அணிஸ் (21) என்பது தெரிய வந்தது. இதில் கஞ்சா கைப்பற்றப்பட்ட வீட்டில் வெங்கடேஷ் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். இவர் டெக்னீசியன் வேலை செய்து வருகிறார். இதற்காக வீட்டை வாடகைக்கு பிடித்து தங்கி உள்ளார்.       பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா பதுக்கியது  தெரிய வந்துள்ளது. இவர்கள் நான்கு பேரின் செல்போன்களை போலீசார் கைப்பற்றி மேலும் வங்கி கணக்குகளை ஆய்வு செய்து வருகிறார்கள். இதில் கைதாகி உள்ள இசக்கி ராஜா மற்றும் தமிழ்ச்செல்வன் மீது கொலை வழக்குகளும் உள்ளன.
Next Story