இந்தாண்டு 1,500 பேருக்கு டெங்கு பாதிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

இந்தாண்டு 1,500 பேருக்கு டெங்கு பாதிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
X
டெங்​கு​வால் இந்​தாண்டு 1,500 பேர் பாதிக்​கப்​பட்​ட​தாக அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார்.
சென்னை மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட பெருங்​குடி மற்​றும் சோழிங்​கநல்​லூர் மண்​டலங்​களில் மேற்​கொள்​ளப்​படும் பரு​வ​மழை முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகள், நிவாரணப் பணி​கள் மற்​றும் அனைத்​துத் துறை பணி​கள் குறித்த ஆய்​வுக்​கூட்​டம் மருத்​து​வம் மற்​றும் மக்​கள் நல்வாழ்​வுத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தலை​மை​யில் நீலாங்​கரை​யில் நேற்று நடை​பெற்​றது. இந்​நிகழ்​வுக்​குப் பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் கூறிய​தாவது: சோழிங்​கநல்​லூர் சட்​டப்​பேர​வைத் தொகுதி 20 வார்​டு​கள் கொண்​டுள்ள மிகப்​பெரிய தொகு​தி. முதல்​வர் எடுத்த பிரத்யேக நடவடிக்​கைகளால், புதிய மழைநீர் வடி​கால்​வாய்​கள் ஏராளமாகக் கட்​டப்​பட்​டன. நாராயணபுரம் ஏரி உபரிநீ​ரால் பள்​ளிக்​கரணை, மடிப்​பாக்​கம் போன்ற பல்​வேறு பகு​தி​கள் ஆண்​டு​தோறும் மிகப்​பெரிய பாதிப்பை சந்​திக்​கும். இன்று அந்​தப் பகு​தி​களில் புதிய இணைப்​புக் கால்வாய்​கள் கட்​டிய​தால் அந்​தப் பகு​தி​களும் பாது​காக்​கப்​பட்​டுள்​ளன. தமிழகத்​தில் இது​வரை டெங்கு காய்ச்​சல் ஏற்​பட்டு 2012-ல் 66 பேர், 2017-ல் 65 பேர் இறந்​துள்​ளனர். இது​தான் அதிக பட்ச உயி​ரிழப்​பு​கள். இந்த அரசு அமைந்த பின் தொடர்ச்​சி​யாக 5 ஆண்​டு​களில் ஒற்றை இலக்​கத்​திலேயே டெங்கு இறப்பு உள்​ளது. பாதிப்​பு​களின் எண்​ணிக்கை இந்த ஆண்டு 1500-ஐக் கடந்​திருக்​கிறது. ஆனால் உயி​ரிழப்பு என்​பது இந்​தாண்டு இது​வரை 9 பேர் மட்​டுமே. அது​வும், இருதய நோய் பாதிப்பு உள்​ளவர்​கள் மற்​றும் இணை நோய் பாதிப்பு உள்​ளவர்​கள், மருத்​து​வ​மனைக்கு வராமல் வீட்​டிலேயே இருந்​தவர்​கள்​தான் இறந்​துள்​ளனர். இவ்​வாறு அவர் கூறி​னார் இந்​நிகழ்​வில் சோழிங்​கநல்​லூர் எம்​எல்ஏ எஸ்​.அர​விந்த் ரமேஷ், சோழிங்​கநல்​லூர், பெருங்​குடி மண்டல கண்​காணிப்பு அலு​வலர்​கள்​ தெ.​பாஸ்​கர​பாண்​டியன்​, மகேஸ்​வரி ரவிக்​கு​மார்​, தெற்​கு வட்​​டார துணை ஆணை​யர்​ அஃ​தாப்​ ரசூல்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.
Next Story