தனியார் கல்லூரி பேருந்தும் டிப்பர் லாரியும் மோதிய விபத்தில் - டிப்பர் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர்பலி - கல்லூரி பேருந்தில் பயணம் செய்த 16பேர் காயம் ....*

தனியார் கல்லூரி பேருந்தும் டிப்பர் லாரியும் மோதிய  விபத்தில் - டிப்பர் லாரியை ஓட்டி வந்த  ஓட்டுநர்பலி - கல்லூரி பேருந்தில் பயணம் செய்த 16பேர் காயம் ....*
X
தனியார் கல்லூரி பேருந்தும் டிப்பர் லாரியும் மோதிய விபத்தில் - டிப்பர் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர்பலி - கல்லூரி பேருந்தில் பயணம் செய்த 16பேர் காயம் ....*
விருதுநகரில் தனியார் கல்லூரி பேருந்தும் டிப்பர் லாரியும் மோதிய விபத்தில் - டிப்பர் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர்பலி - கல்லூரி பேருந்தில் பயணம் செய்த 16பேர் காயம் .... விருதுநகர் அருகே சிவகாசி செங்குன்றாபுரம் செல்லும் சாலை பிரிவில் மண் ஏற்றி டிப்பர் லாரியும் - விருதுநகரில் இருந்து கல்லூரி மாணவிகளை ஏற்றிக் கொண்டு சென்ற தனியார் கல்லூரி பேருந்தும் எதிரெதிரே மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிப்பர் லாரியை ஒட்டி வந்த விருதுநகர் யானைக்குழாய் தெருவைச் சேர்ந்த ஒட்டுநர் தங்கமாராயப்பன் (45)சம்பவ இடத்திலேயே பலி - மேலும் கல்லூரி பேருந்தில் பயணம் செய்த வந்த ஒரு ஆசிரியர் மாணவ, மாணவிகள் உட்பட 16 பேர் சிறுசிறு காயங்களுடன் அரசு கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் . இதில் கல்லூரி பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் அருப்புக் கோட்டையைச் சேர்ந்த சீனிவாசன் (58) பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார் இந்த விபத்து குறித்து ஆமத்தூர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story