ஓடும் ரயிலில் பெண்ணிடம் 17 பவுன் நகை திருட்டு

X

மதுரை திருமங்கலத்தை சேர்ந்த பெண்ணிடம் ஓடும் ரயிலில் 17 பவுன் நகை களவு போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது
சென்னை மேடவாகத்தினை சேர்ந்த ஜெயராமன் மற்றும் இவரது மனைவி தமிழ்ச்செல்வி(27) ஆகியோர் சென்னையில் ஓட்டல் நடத்தி வருகின்றனர். மதுரை திருமங்கலம் காமராஜபுரத்தை சேர்ந்த தமிழ்ச்செல்விக்கு, இங்கு சொந்த வீடு உள்ளது. இவர்கள் கடந்த மாதம் 27ம் தேதி திருமங்கலத்தில் உறவினர் வீட்டு திருமணத்தில் பங்கேற்க வந்திருந்தனர். பின்னர் கடந்த 2ம் தேதி சென்னைக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு புறப்பட்டனர்.அப்போது தங்கமுகப்பு செயின், கல்தோடு உள்ளிட்ட 17 பவுன் நகைகளை பேக்கில் வைத்திருந்தார். சென்னை சென்று பார்த்த போது ரூ.15 லட்சம் மதிப்பிலான நகைகள் மாயமாகிருந்தது. திருமங்கலத்திலிருந்து சென்னை வருவதற்குள் ஓடும் ரயிலில் மர்ம நபர் நகைகளை திருடிச்சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story