விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று முல்லை பெரியாற்றில் இருந்து 18 ம் கால்வாய்க்கு தண்ணீர் திறப்பு
Periyakulam King 24x7 |21 Dec 2024 6:12 PM IST
18ம் கால்வாய்
தேனி மாவட்டம் கம்பம் அருகே கூடலூர் லேயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றில் இருந்து. 18 ம் கால்வாயில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடக் கோரி தமிழக அரசுக்கு 18 ம் கால்வாய் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்து இருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைப்படி 18ம் கால்வாயிக்கு தண்ணீர் திறப்பதற்கு அரசு ஆனண பிறப்பிக்கப்பட்டது இதனை அடுத்து தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா மற்றும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் இருவரும் இணைந்து முல்லைப்பெரியாற்றில் இருந்து வினாடிக்கு 98 கன அடி தண்ணீர் வீதம் 30 நாட்களுக்கு தண்ணீரை திறந்து வைத்தார். இந்த தண்ணீர் திறப்பதன் மூலம் தேவாரம் பகுதியில் 44 கண்மாய்கள் மூலம் 4614. 25 ஏக்கர் பாசன பரப்பு நிலங்கள் பாசன வசதி பெறும், மேலும் உத்தமபாளையம் தாலுகாவில் 21 கண்மாய்கள் வாயிலாக 2045.35 ஏக்கர் பாசன பரப்பு நிலங்கள் மற்றும் போடிநாயக்கனூர் தாலுகாவில் 23 கண்மாய்கள் வாயிலாக 2568.90 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறுகின்றன. இந்த நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், 18- ஆம் கால்வாய் விவசாயிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். தண்ணீர் திறப்பு குறித்து நன்றி தெரிவித்த விவசாயிகள் கால்வாயை தூர்வாரி திறந்திருந்தால் கடைமடை வரை தண்ணீர் சென்றிருக்கும் ஆனால் அதை அரசு செய்யவில்லை அடுத்த ஆண்டாவது தூர்வாரி தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story