சுடுகாட்டில் இருதரப்பினர் மோதல்: வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

X

போலீசார் நடவடிக்கை
சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 33). இவரது நண்பர் சரவணன். இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு அன்னதானப்பட்டி கருவாட்டு மண்டி சுடுகாடு பகுதியில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அங்கு வந்த சிலருக்கும், நந்தகுமார் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். திடீரென நந்தகுமார், சரவணன் செல்போன்களை அந்த நபர்கள் பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் செல்போன் பறித்தது அன்னதானப்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த தினேஷ் குமார் (41), மணிகண்டன் (37) என்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள நபரை தேடி வருகின்றனர்.
Next Story