ஆயுதங்களுடன் திரிந்த 2 பேர் கைது : வாள், அரிவாள் பறிமுதல்

X

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் திரிந்த 2 பேர் கைது : வாள், அரிவாள் பறிமுதல்
தூத்துக்குடியில் வாள், அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் திரிந்த 2பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மத்திய பாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கேவிகே நகரில் சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்ததில் அவர்கள் வாள் மற்றும் அரிவாள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து 2பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், அவர்கள் தூத்துக்குடி பிரையன்ட் நகர் 10வது தெருவை சேர்ந்த இசக்கி ராஜா (25) தேவர் காலனி சேர்ந்த சூரிய பிரகாஷ் (20) எனத தெரியவந்தது. அவர்கள் 2பேரையும் கைது செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
Next Story