சேலத்தில் பெண்களை வைத்து வீட்டில் விபசாரம் 2 புரோக்கர்கள் கைது

X

போலீசார் நடவடிக்கை
சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்த பிரகாஷ் (வயது 30) என்பவர் நேற்று முன்தினம் தனது நண்பருடன் வின்சென்ட் பகுதியில் நடந்து சென்றார். அப்போது, அவரது செல்போன் எண்ணுக்கு திடீரென ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ரூ.500 கொடுத்தால் பெண்களுடன் ஜாலியாக இருக்கலாம் என தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சீரங்கபாளையம் விநாயகர் கோவில் அருகேயுள்ள ஒரு வீட்டில் 2 பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து அங்கு போலீசார் சென்று விசாரித்தனர். அப்போது, விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்களை போலீசார் மீட்டனர். மேலும், அவர்களுக்கு புரோக்கராக செயல்பட்டு வந்ததாக விஜி, செல்வராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து மீட்கப்பட்ட 2 பெண்களும் அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோல், சேலம் மாநகரில் அழகு நிலையம் அல்லது ஸ்பா என்ற பெயரில் விபசாரம் நடைபெறுகிறதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story