பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் 2 வீடுகளில் பணம், நகை கொள்ளை.

பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் 2 வீடுகளில் பணம், நகை கொள்ளை.
X
பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் 2 வீடுகளில் பணம், நகை கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை.
பரமத்திவேலுார்,செப்.9: பரமத்தி வேலுார் தெற்கு நல்லியாம்பாளையம் சண்முகா நகரை சேர்ந்த சக்திவேல் (42).பைனான்ஸ் அதிபர். இவரது மனைவி பூங்கோதை (38). இவர் கரூரில் உள்ள தனியார் கல்லூரியில்  பேராசிரியராக பணியாற்றி வருகிறார். சக்திவேல் தனது நண்பருடன் சொந்த வேலையாக கோவை சென்று விட்டார். பூங்கோதை வழக்கம் போல் வீட்டை பூட்டிவிட்டு கல்லூரிக்கு நேற்று காலை சென்று விட்டார். நேற்று மதியம் வீடு திரும்பிய சக்திவேல் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடைப்பதை கண்டு  அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோ லாக்கரை உடைத்து அதில் இருந்த 35 பவுன் நகை மற்றும் ரூ.70 ஆயிரம் பணம் திருடு போனது தெரியவந்தது. சக்திவேல் நகை, பணம் திருட்டு குறித்து பரமத்திவேலுார் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் முதற்கட்ட விசாரணையில் காரில் வந்த மர்ம நபர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பணம், நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. அருகில் இருந்த சி.சி.டி.வி கேமராவை ஆய்வு செய்த போது காரில் இருந்த வண்டி நம்பர் போலியானது என்பதும் தெரிய வந்தது. இதேபோல் பரமத்தி அரசு மேல்நிலை பள்ளி அருகே  தமிழரசி வயசு (58). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று காலை வீட்டிற்கு வெளியே சென்று விட்டு திரும்பி வந்த போது வீட்டின் கதவை உடைத்து வீட்டில் வைத்திருந்த 2 பவுன் நகை திருடு போனது தெரியவந்தது. புகாரின் பேரில் பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story