போதை மாத்திரை விற்ற வழக்கில் கைதான 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம்.

போதை மாத்திரை விற்ற வழக்கில் கைதான 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம்.
X
பரமத்தி வேலூரில் போதை மாத்திரை விற்ற வழக்கில் கைதான 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
பரமத்தி வேலூர், செப்.14: பரமத்தி வேலூர் பேட்டையில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதி அருகே கடந்த மாதம் 20-ந் தேதி சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்த வழக்கில் பரமத்திவேலூர் அருகே உ ** ள்ள பாலப்பட்டியை சேர்ந்த இலியாஸ் (26), பாலப்பட்டி அருகே உள்ள கொமராபா ளையத்தை சேர்ந்த பிரேம்குமார் (30) ஆகிய இருவரையும் பரமத்தி வேலூர் போலீசார் கைது செய்து விற்பனைக்கு வைத்திருந்த ந்த போதை மாத்திரைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விமலா கலெக்டர் துர்க்கா மூர்த்தி உத்தரவின் பேரில் இருவரும் குண்டர் சட்டத்தில் கீழ் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story