சேலத்தில் லாட்டரி சீட்டு விற்ற முதியவர் உள்பட 2 பேர் கைது

சேலத்தில் லாட்டரி சீட்டு விற்ற முதியவர் உள்பட 2 பேர் கைது
X
போலீசார் நடவடிக்கை
சேலம் கொண்டலாம்பட்டி போலீசார் வேடுகாத்தம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முதியவர் ஒருவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரித்த போது, அவர் சேலம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த ரத்தினவேல் (வயது 72) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் சேலம் கொண்டலாம்பட்டி போலீசார் நேற்று சிவதாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒருவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வது தெரிந்தது. அவரை பிடித்து விசாரணை நடத்திய போது அதே பகுதியை சேர்ந்த நாகராஜன் (வயது 52) என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
Next Story