ஓசூர்: தொழிலாளி உள்பட 2 பேரை தாக்கிய 2 பேர் கைது.

ஓசூர்: தொழிலாளி உள்பட 2 பேரை தாக்கிய 2 பேர் கைது.
X
ஓசூர்: தொழிலாளி உள்பட 2 பேரை தாக்கிய 2 பேர் கைது.
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பசவராஜ் (40) தொழிலாளியான. இவர் கடந்த 30-ஆம் தேதி அன்று இவரது நண்பர் சுரேஷ் என்பவர் மூக்கண்டப்பள்ளி மாநகராட்சி பூங்கா பகுதியில் நடந்து சென்றபோது, அங்கிருந்த ஹரிபிரசாத் (25) மற்றும் சிலர் சுரேசுடன் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதை பசவராஜூம், அவரது நண்பர் சாகர் (35) என்பவரும் தட்டி கேட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஹரிபிரசாத் உள்ளிட்டோர், பசவராஜ், சாகர் ஆகிய இரண்டு பேரை தாக்கியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிபிரசாத், தமிழ்செல்வன் (19) ஆகிய இரண்டு பேரை கைது செய்து ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story