ஆரணி புதிய பஸ்நிலையத்தில் செல்போன் மற்றும் பர்ஸ் திருடிச்சென்ற 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது.

X
Arani King 24x7 |4 Oct 2025 8:51 PM ISTஆரணி புதிய பஸ்நிலையத்தில் பெண்ணிடமிருந்து செல்போன் மற்றும் மணிபர்ஸ் திருடிச்சென்ற 2 பெண்கள் உள்பட 3 பேரை ஆரணி நகர போலீஸார் கைது செய்தனர்
ஆரணி புதிய பஸ்நிலையத்தில் பெண்ணிடமிருந்து செல்போன் மற்றும் மணிபர்ஸ் திருடிச்சென்ற 2 பெண்கள் உள்பட 3 பேரை ஆரணி நகர போலீஸார் கைது செய்தனர். ஆரணி அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த காயத்ரி, இவரது தாயார் ருக்மணி ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை ஆரணி நகருக்கு வந்தனர். பின்னர் ஆரணி புதிய பஸ் நிலையத்திலிருந்து விண்ணமங்கலம் செல்வதற்காக பஸ் ஏறச் செல்லும்போது அவரது பேக்கில் வைத்திருந்த மணி பர்ஸ் மற்றும் செல்போன் அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதனால் காயத்ரி கூச்சலிட்டார். மேலும் ஆரணி நகர காவல் நிலையத்தில் காயத்ரி புகார் கொடுத்தார். இதன் பெயரில் ஆரணி நகர எஸ்.ஐ கணேசன் வழக்கு பதிவு செய்தார். மேலும் இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம் தலைமையில் எஸ்ஐக்கள் ஆனந்தன், சிறப்பு எஸ்.ஐ கன்றாயன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு புதிய பஸ் நிலையத்தில் அமைந்துள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தொடர்ந்து ஆய்வு செய்ததில் 2 பெண்கள் மற்றும் உடன் இருந்த ஒரு ஆண் ஆகியோர் சந்தேகப்படும்படியாக இருந்ததால் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் பதில் அளித்தும் தடுமாறினர். இதனால் அவர்களை ஆரணி காவல் நிலையத்திற்கு சென்று விசாரணை செய்ததில் ஆரணிபுதிய பஸ்நிலையத்தில் செல்போன் மற்றும் மணிபர்ஸ் திருடியது தெரியவந்தது. மேலும் தொடர்ந்து விசாரணை செய்ததில் வெவ்வேறு இடங்களில் இவர்கள் 3 பேரும் சேர்ந்து ஆங்காங்கே பணம் திருடியர்கள் என்றும் அவ்வாறு திருடிய ரூ.1.5லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுக்கா, வி.சி.மோட்டூர் கிராமத்தை சேர்ந்த ராம்குமார் மனைவி மஞ்சு(25), கிருஷ்ணகிரி மாவட்டம் சேர்ந்த மணிவண்ணன் மனைவி சந்தியா(27), பெருமாள் மகன் அரிகிருஷ்ணன்(23) என தெரியவந்தது. இவர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
