சூரசம்ஹார விழாவில் 20 சவரன் நகை மாயம். போலீசார் விசாரணை.

சூரசம்ஹார விழாவில் 20 சவரன் நகை மாயம். போலீசார் விசாரணை.
X
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழாவில் 20 சவரன் நகை மாயம். போலீசார் விசாரணை.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழாவில் 20 சவரன் நகை மாயம். போலீசார் விசாரணை. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று சூரசம்ஹார விழா நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் கடற்கரையில் நடந்தது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா நிறைவடைந்ததும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிச் சென்றனர். விழாவிற்கு வந்த 3 பக்தர்களின் 20 சவரன் தங்க நகைகள் மாயமானதாக திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு செல்போன்களும் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story