ஒகேனக்கல் ஆற்றில் 2000 கன அடியாக நீர்வரத்து சரிவு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 2000 கன அடியாக நீர்வரத்து சரிவு, சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சமீப நாட்களாக ஒகேனக்கல் வனப்பகுதி மற்றும் காவிரி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் பொழியும் மழையின் அளவை பொறுத்து நீரின் வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக காணப்பட்டு வரும் சூழலில் நேற்று முன்தினம் 3000 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து ஏப்ரல் 28 இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 2000 கன அடியாக நீர்வரத்து சரிந்து காணப்பட்டுள்ளது மேலும் தற்போது கோடை காலம் தொடங்கியதை எடுத்து வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள ஒகேனக்கல் அருவியை நோக்கி வர துவங்கியுள்ளனர் இதனால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது இதனால் மெயின் அருவி,சினி ஃபால்ஸ், முதலைப்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது. பயணிகள் அருவியில் குளித்தும் மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை உண்டும் மகிழ்ந்தனர்.
Next Story