கரூர்- முப்பெரும் விழா 2026 தேர்தலுக்கு திருப்புமுனையாக இருக்கும்-அமைச்சர் நேரு கரூரில் பேட்டி

கரூர்- முப்பெரும் விழா 2026 தேர்தலுக்கு திருப்புமுனையாக இருக்கும்-அமைச்சர் நேரு கரூரில் பேட்டி
கரூர்- முப்பெரும் விழா 2026 தேர்தலுக்கு திருப்புமுனையாக இருக்கும்-அமைச்சர் நேரு கரூரில் பேட்டி செப்டம்பர் 17ல் கரூர் கோடங்கிபட்டியில் திமுக முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான பந்தல் அமைக்கும் பணி மற்றும் முன்னேற்பாடுகள் நடைபெறுவதை நேற்று அமைச்சர் கே என் நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கேட்டறிந்தார். பின் செய்தியாளரிடம் அமைச்சர் கே என் நேரு பேசும்போது கரூரில் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ள முப்பெரும் விழாவை மாநாடு போல் நடத்துவதற்கு செந்தில் பாலாஜி முன்னேற்பாடுகளை செய்து வருகிறார். சாதாரண கூட்டத்தையே மாநாடு போல் நடத்தும் செந்தில் பாலாஜி இந்த முப்பெரும் விழாவினை மிகப்பெரிய அளவில் 3 லட்சம் பேர் பங்குபெறும் வகையில் சிறப்பானதாக செய்து வருகிறார். கரூர் நாமக்கல் திண்டுக்கல்,கோவை மற்றும் திருச்சியில் இருந்து நிர்வாகிகளும் தொண்டர்களும் அதிக அளவில் பங்கேற்க உள்ளோம். செந்தில் பாலாஜி எதையும் சிறப்பாக செய்து காட்டுபவர் அதனால்தான் இந்த முப்பெரும் விழாவினை தலைவர் ஸ்டாலின் செந்தில் பாலாஜியிடம் ஒப்படைத்துள்ளார். இந்த முப்பெரும் விழா வரும் 2026 தேர்தலில் மிகப்பெரும் திருப்புமுனையாக அமையும். தேர்தலில் வெற்றிக்கான முதல் அஸ்திவாரத்தை செந்தில் பாலாஜி இந்த முப்பெரும் விழா மூலம் அமைத்துள்ளார் என தெரிவித்தார்.
Next Story