அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 28 பேர் காயம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 28 பேர் காயம்
X
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 2மணி நிலவரப்படி 28 பேர் காயமடைந்துள்ளனர்.
மதுரை அருகே அவனியாபுரத்தில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டு அதற்கு முன்னதாக மந்தையம்மன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்த பிறகு ஜல்லிக்கட்டு தொடங்கியது. சுமார் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் 2 மணி நிலவரப்படி 8வதுசுற்று முடிந்த நிலையில் 28 பேர் காயமடைந்தனர். இதில் 5 நபர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Next Story