ராசிபுரம் அருகே டாஸ்மார்க் ஊழியரை கத்தியால் குத்தி விட்டு ரூ.2.80 லட்ச ரூபாய் பணத்தை திருடி சென்ற மர்ம கும்பல். மங்களபுரம் காவல் துறையினர் விசாரணை...

X
ராசிபுரம் அருகே டாஸ்மார்க் ஊழியரை கத்தியால் குத்தி விட்டு ரூ.2.80 லட்ச ரூபாய் பணத்தை திருடி சென்ற மர்ம கும்பல். மங்களபுரம் காவல் துறையினர் விசாரணை...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த திம்மநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் பெரியசாமி என்பவரது மகன் முத்துசாமி(40) விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று இரவு 10 மணிக்கு கடையை மூடிவிட்டு விற்பனையான பணத்தை தனது இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றுள்ளார். அப்போது கடையில் இருந்து சிறிது தூரத்திலேயே முத்துசாமியை இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் இருசக்கர வாகனத்தை வழிமறித்து கத்தியால் குத்தி விட்டு அவர் வைத்திருந்த 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றதாக கூறப்படுகிறது. அதே கடையில் பணிபுரியும் பாலமுருகன் என்பவர் பின் தொடர்ந்து வந்த நிலையில் அவர் ரத்த வெள்ளத்தில் இருந்ததை கண்டு சக பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார். காயமடைந்த முத்துசாமிக்கு தற்போது ராசிபுரம் அரச மருத்துவமனை சிகிச்சை பெற்று வரும் நிலையை முத்துசாமியை மர்ம நபர்கள் தாக்கி பணத்தை திருடி சென்றார்களா? அல்லது வேறு ஏதாவது காரணங்களா என்பது குறித்து மங்களபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
Next Story