பூச்சி மருந்து கலந்த நீரை குடித்த ஒரு கறவை மாடு உட்பட 3 பசுமாடுகள் பலி

கும்மிடிப்பூண்டி அருகே பூச்சி மருந்து கலந்த நீரை குடித்த ஒரு கறவை மாடு உட்பட 3 பசுமாடுகள் பலி சம்பவ இடத்திலேயே துடி புடித்து உயிரிழந்த இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான மாடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை
கும்மிடிப்பூண்டி அருகே பூச்சி மருந்து கலந்த நீரை குடித்த ஒரு கறவை மாடு உட்பட 3 பசுமாடுகள் பலி சம்பவ இடத்திலேயே துடி புடித்து உயிரிழந்த இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான மாடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை. கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சி காயலார்மேடு கிராமத்தில் வெங்கடேசன் (50 ) ,மீனாட்சி (45 ) தம்பதியர் விவசாயக் கூலிகளாக வேலை பார்த்து வருகின்றனர். மேலும் இவர்கள் விவசாயம் சார்ந்த தொழிலான மாடு கடந்த 20 வருடங்களாக ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலும் மாடு வளர்ப்பையே நம்பி வாழ்ந்து வரும் இந்த தம்பதியர் மாடுகளின் மூலம் கிடைக்கக்கூடிய வருமானத்தை வைத்து தங்களின் குடும்பத்தை மேம்படுத்துவதுடன் குழந்தைகளையும் படிக்க வைத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் மேய்ச்சலுக்காக கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு கரவை மாடு உட்பட 3 பசு மாடுகள் மாலை நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் மாடுகளைத் தேடிச் சென்ற மீனாட்சி சந்தேகத்தின் பேரில் அருகாமையில் உள்ள மூங்கில் தோப்பில் தேடி உள்ளார் அப்போது தான் வளர்த்த பசு மாடு ஒன்று துடிதுடித்தபடி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் அருகாமையில் இரண்டு மாடுகளும் உயிரிழந்த நிலையில் இருப்பதைக் கண்ட அவர் அருகாமையில் இருப்பவர்களை அழைத்து காண்பித்தபோது மூங்கில் தோட்டத்தில் அதிகரித்து வரும் புர்க்கள் உற்பத்தியை தடுக்க தெளிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து தேங்கி இருப்பதை கண்டறிந்தனர். மேலும் செஞ்சிருந்த விஷம் கலந்த நீரை பசுமாடுகள் குடிக்குச் சென்ற கால் தடங்கல் இருப்பதை உறுதி செய்தனர். இச்சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய போலீசாருக்கு அளித்த தகவலின் பெயரில் சிப்காட் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான மூங்கில் தோட்டத்தில் விஷ நீரை குடித்து சுமார் 2 லட்ச ரூபாய் மதிப்பிலான மூன்று பசு மாடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story