விஜய கரிசல்குளம் 3-ம் கட்ட அகழாய்வில் அலங்காரப் பொருட்களை மெருகேற்றி பாலிஷ் போடவும், வீடுகளில் தரை தளத்தை சமப்படுத்த பயன்படும் மெருகேற்றும் கல் கண்டெடுப்பு*

விஜய கரிசல்குளம் 3-ம் கட்ட அகழாய்வில்  அலங்காரப் பொருட்களை மெருகேற்றி பாலிஷ் போடவும், வீடுகளில் தரை தளத்தை சமப்படுத்த பயன்படும் மெருகேற்றும் கல் கண்டெடுப்பு*
X
விஜய கரிசல்குளம் 3-ம் கட்ட அகழாய்வில் அலங்காரப் பொருட்களை மெருகேற்றி பாலிஷ் போடவும், வீடுகளில் தரை தளத்தை சமப்படுத்த பயன்படும் மெருகேற்றும் கல் கண்டெடுப்பு*
விருதுநகர் அருகே வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளம் 3-ம் கட்ட அகழாய்வில் அலங்காரப் பொருட்களை மெருகேற்றி பாலிஷ் போடவும், வீடுகளில் தரை தளத்தை சமப்படுத்த பயன்படும் மெருகேற்றும் கல் கண்டெடுப்பு விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3-ம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் தோண்டப்பட்ட 18 குழிகளில் உடைந்த நிலையில் சூடு மண் உருவ பொம்மை, வட்ட சில்லு, தங்க மணி, சூது பவள மணி உட்பட 3,300-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கிடைக்க பெற்றுள்ளன. இந்நிலையில் தற்போது இரண்டு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்று வரும் பணியின் போது  அலங்காரப் பொருட்களை மெருகேற்றி பாலிஷ் போடவும், வீட்டில் தரை தளத்தை சமப்படுத்த பயன் படும் மெருகேற்றும் கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  இது குறித்து அகழாய்வு இயக்குநர் பாஸ்கர், அகழாய்வில் முன்னோர்கள் இப்பகுதியில் வசித்து சங்கு வளையல்கள் உள்ளிட்ட அலங்கார தொழிற்கூடங்கள் நடத்தியதற்கான பல்வேறு சான்றுகள் கிடைத்து வருகின்றது. இந்த அலங்காரப் பொருட்களை மெருகேற்றி பாலிஷ் போடவும், வீட்டில் தரை தளத்தை சமப்படுத்துவதற்கும் இந்தக்கல் பயன்படுத்தியுள்ளது அகழாய்வு ஆய்வின் மூலம் தெரிய வருகிறது என தெரிவித்தார்.
Next Story