சேலத்தில் மருந்து கடை உரிமையாளரிடம் பணம் பறித்த மேலும் 3 பேர் கைது

சேலத்தில் மருந்து கடை உரிமையாளரிடம் பணம் பறித்த மேலும் 3 பேர் கைது
X
போலீசார் நடவடிக்கை
சேலம் அழகாபுரம் அழகர் நகரை செல்வமுத்து (வயது 65). இவர் சேலம் 4 ரோடு பகுதியில் மருந்துக்கடை வைத்துள்ளார். இவர் கடந்த 23-ந் தேதி இரவு வியாபாரம் முடிந்ததும் தனது மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். நியூ பேர்லேண்ட்ஸ் முதல் கிராஸ் பகுதியில் சென்ற போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் 5 பேர் வந்தனர். பின்னர் அவர்கள் செல்வமுத்துவின் கவனத்தை திசை திருப்பிவிட்டு மொபட்டில் இருந்த பணப்பையை பறித்துவிட்டு தப்பி சென்றனர். இந்த பையில் ரூ.44 ஆயிரத்து 500 இருந்தது. பின்னர் இந்த வழிப்பறி குறித்து அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் செல்வமுத்துவிடம் பணம் பறித்தது கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் (22), சண்முகம் (20), சானவாஸ் (22), பிரேம்குமார் (23), மாரியப்பன் (29) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதில் சந்தோஷ்குமார், சண்முகம் ஆகியோரை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் சானவாஸ், பிரேம்குமார், மாரியப்பன் ஆகிய 3 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
Next Story