சென்னை வங்கி பெண் மேலாளருக்கு ரூ.3 கோடி இழப்பீடு தொகை

சென்னை வங்கி பெண் மேலாளருக்கு ரூ.3 கோடி இழப்பீடு தொகை
X
சேலத்தில் ஆம்புலன்சுக்கு நேரில் வந்து நீதிபதி வழங்கினார்
சென்னையை சேர்ந்தவர் கவிதா (வயது 49). இவர் தனியார் வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காரில் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தாளையூர் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது டிரைவரின் கவனக்குறைவால் கார் சாலையில் இருந்த தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த கவிதாவின் உடல் முழுவதும் செயலிழந்தது. இதையடுத்து இழப்பீடு கேட்டு கவிதா சேலம் மோட்டார் வாகன விபத்துகளுக்கான 2-வது சிறப்பு சார்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் இருதரப்பினர்களிடையே சமரசம் ஏற்பட்டு, இரண்டாம் எதிர் மனுதாரரான தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் கவிதாவுக்கு ரூ.3 கோடி இழப்பீடு தொகை வழங்க ஒப்புக்கொண்டது. இதையடுத்து நேற்று ஆம்புலன்ஸ் மூலம் கவிதா கோர்ட்டுக்கு வந்தார். அப்போது ஆம்புலன்சுக்கு நேரில் வந்து கவிதாவிற்கு ரூ.3 கோடிக்கான காசோலையை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வழங்கினார்.
Next Story