குமரி : பாறை உடைத்த 3 பேர் கைது

X

கீழ் குளம்
புதுக்கடை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜான் ரோஸ் தலைமையிலான போலீசார் கீழ்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நெடுந்தட்டு என்ற பகுதியில் அனுமதி இன்றி சிலர் பாறைகளை உடைத்து கொண்டிருப்பதாக கிடைத்த தகவரின் பேரில் போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது இயந்திரங்கள் மூலம் பாறைகளை உடைத்து கொண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அனுமதி இன்றி அனுமதியின்றி பாறைகளை உடைத்துக் கொண்டிருந்த கருங்கல் பகுதியை சேர்ந்த ஜோசப் ராஜ் (49), செம்பொன்விளையைச் சேர்ந்த அருண் (36) மற்றும் பாறை உடைக்கும் இயந்திர டிரைவர் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story