விடைத்தாள் திருத்தும் பணி 3 மையங்களில் 1, 200 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்

விடைத்தாள் திருத்தும் பணி 3 மையங்களில் 1, 200 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்
X
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் -2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது
தமிழகத்தில் பிளஸ்- 2 பொதுத்தேர்வு கடந்த 3-ம் தேதியும், பிளஸ்- 1 பொதுத்தேர்வு கடந்த 5-ம் தேதியும் தொடங்கியது. இதில், பிளஸ் -2 பொதுத்தேர்வு கடந்த 25 ஆம் தேதி நிறைவடைந்தது. பிளஸ்- 1 பொதுத்தேர்வு கடந்த 27-ம் தேதி நிறைவடைந்தது. ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்- 2 பொதுத்தேர்வினை பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தம் 22,923 பேர் எழுதினர். பிளஸ்- 1 பொதுத்தேர்வினை மாணவ-மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தம் 24,289 பேர் எழுதினர். பிளஸ்- 1 மற்றும் பிளஸ் -2 பொதுத்தேர்வு மதியம் 1.15 மணிக்கு முடிந்ததும் அந்தந்த முதன்மை கண்காணிப்பாளர்கள் மாணவ-மாணவிகளின் விடைத்தாள்களை, மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 4 விடைத்தாள் பாதுகாப்பு மையத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து சென்றனர். அங்கு விடைத்தாள்கள் பாதுகாப்பு அறைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பிளஸ்- 2 மற்றும் பிளஸ்- 1 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்துவதற்கு 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், பிளஸ்- 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்- 2 மற்றும் பிளஸ்- 1 விடைத்தாள் திருத்த 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை, ஈரோடு யு.ஆர்.சி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, திண்டல் பாரதி வித்யா பவன் பள்ளி, கோபி சாரதா மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஆகிய 3 பள்ளிகள் ஆகும். பிளஸ் -2 விடைத்தாள்கள் இன்று முதல் திருத்தும் பணி தொடங்கியுள்ளது. இந்தப் பணியில் 1200 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணியை ஒரு வாரத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல் பிளஸ்- 1 பொது தேர்வுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி வருகிற ஏப்ரல் 11ம் தேதி தொடங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story