காட்பாடி அருகே 34 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!
Vellore King 24x7 |24 July 2024 1:14 PM IST
காட்பாடி அருகே வேலூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புணர்வு துறை போலீசார் 34 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர்.
வேலூர் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை டிஎஸ்பி நந்தகுமார் தலைமையில் போலீசார் திருவலம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த லாரியை மடக்கி விசாரணை நடத்தினர். விசாரணையில் லாரியில் சுமார் 34 டன் ரேஷன் அரிசி கடத்திவரப்பட்டது தெரிந்தது. பின்னர் கடத்தலில் ஈடுபட்ட சண்முகம், சங்கர் மற்றும் அரிகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் லாரியுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் ஒப்படைத்தனர்.
Next Story