போக்சோ வழக்கில் 35 ஆண்டுகள் சிறை தண்டனை

போக்சோ வழக்கில் 35 ஆண்டுகள் சிறை தண்டனை
X
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
திண்டுக்கல் மாவட்டம் நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திண்டுக்கல் மருதாணிகுளம் பகுதியைச் சேர்ந்த மதியழகன்(23) என்பவரை திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா, நீதிமன்ற முதல் நிலை காவலர் வசந்தி மற்றும் அரசு வழக்கறிஞர் ஜோதி சீரிய முயற்சியால் திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி மதியழகன் என்பவருக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 20,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள். மேலும் இந்தாண்டு இதுவரை 34 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story