கிறிஸ்துவ ஆலயத்தில் நள்ளிரவில் நடைபெற்ற திருத்தேரோட்டம்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சௌரிபாளையம் பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட புனித மரிய மதலேனாள் ஆலயம் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்ததது. இந்த ஆலையத்தில் ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் திருத்தேர் பெருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேரோட்டம் கடந்த 13 ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து திருப்பலி நிகழ்ச்சியும், நவநாள் திருப்பலி நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும், 22ம் தேதி நள்ளிரவு 5 திருத்தேர் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து திருப்பலி வரவேற்பு, ஆடம்பர திருப்பலி, ஜெப வழிபாடு, கூட்டுப் பாடல் திருப்பலி, இரவில் குணமளிக்கும் ஜெப வழிபாடும் நடந்தது. தேவாலாயத்திற்கு வந்திருந்த பக்தர்கள் மெழுகுவர்த்தி, புனித எண்ணை விளக்கு வைத்தும் புனித மரிய மதலேனாளை வழிப்பட்டனர்.
தொடர்ந்து புனித மரிய மதலேனாள், புனித பிரான்சிங்கு சவேரியார், புனித வனத்து அந்தோணியார், புனித ஆரோக்கியநாதர், புனிதமைக்கேல் சம்மன்சு ஆகிய சிலைகள் கொண்டு வரப்பட்டு அந்தந்த தேரில் அமர்த்தப்பட்டு இரவு 1 மணிக்கு புனித அன்னையின் ஆடம்பரத் தேர்பவனி நடைபெற்றது. இதில் புனித மரிய மதலேனாள், புனித பிரான்சிங்கு சவேரியார், புனித வனத்து அந்தோணியார், புனித ஆரோக்கியநாதர், புனிதமைக்கேல் சம்மன்சு உள்ளிட்ட 5 தேர்கள், மின் விளக்கு மற்றும் வண்ண காகித மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தேர் பவனி ஆலயத்தை சுற்றி வலம் வந்தது. தேரை சுற்றி வளம் வரும் பொதுமக்கள் தங்களுக்குள் உள்ள மனக்குறைகள் , மனகுழப்பம் , பில்லி, சூனியம், குழந்தை பாக்கியம் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் திருவிழாவிற்கு வந்து பங்கு தந்தையின் ஆசீர்வாதம் பெற்றால் உடனே அருள்வந்து நோய் தீர்ந்துவிடும் என்பது ஐதீகம். தாங்கள் ஒரு காரியத்தை நினைத்து கொண்டு இந்த ஆலயத்திற்கு வந்து வேண்டி கொண்டால் உடனே நிறைவேறும் என்பது நம்பிக்கை. இதனால் பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்..