மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து நாமக்கல்லில் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்!!
நாமக்கல் சேந்தமங்கலம் சாலையில் உள்ள இந்தியன் வங்கியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட ஊர்வலமாக வந்தனர்.அவர்கள் அனைவரையும் போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்து நிறுத்தினர்.
மத்திய அரசு 2024-25 ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை கடந்த 23 ம் தேதி தாக்கல் செய்தது. இந்த நிதி நிலை அறிக்கையில் எதிர் கட்சிகள் ஆளும் மாநிலத்திற்கு நிதி ஒதுக்காதது, சிறு குறு தொழில்கள், விவசாயிகள், தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டது, விவசாயம்,உணவு, உரமானியங்கள், 100 நாள் வேலைக்கு நிதி குறைப்பு, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாராள வரி சலுகை உள்ளிட்டவைகளை கண்டித்து நாமக்கல் - சேந்தமங்கலம் சாலையில் உள்ள இந்தியன் வங்கியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட ஊர்வலமாக வந்தனர். அவர்கள் அனைவரையும் போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்து நிறுத்தினர் அப்போது இருத்தரப்பினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டன. இதனையடுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் செய்தனர் அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
Next Story