அக்கீம் கேர் & க்யூர் சிகிச்சை மையம் நாளை 18 ல் துவக்கம்
அக்கீம் கேர் & க்யூர் சிகிச்சை மையம் நாளை 18 ல் எம்.பி, அமைச்சா் துவக்கி வைக்க உள்ளனா்.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் வீதியில் திப்பு சுல்தான் பள்ளிவாசல் எதிர்ப்புறம் அக்கீம் கேர் & க்யூர் இயற்கை சிகிச்சை மையத்தின் துவக்க விழா நாளை (ஆகஸ்ட் -18) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ளது. விழாவில் மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி மற்றும் தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு இச்சிகிச்சை மையத்தை துவக்கி வைக்க உள்ளனர்.இந்த சிகிச்சை மையத்தில் கால் வலி, கழுத்து வலி, கால் எரிச்சல் மற்றும் மரத்து போதல், இடுப்பு வலி, முழங்கால் வீக்கம், முகப்பரு, கண் நோய்கள், தோள்பட்டை வலி, அல்சர், சினைப்பை நீர்க்கட்டி, தலைமுடி உதிர்தல், சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஒற்றை தலைவலி, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், மாதவிடாய் பிரச்சனைகள், நரம்புக் கோளாறுகள் ஆகியவற்றுக்கு பாத அழுத்த சிகிச்சை முறை, அக்குபஞ்சர், அக்குபிரஷர், டான்தெரபி, ஹிஜாமா முறை உள்ளிட்ட மருத்துவ முறைகளைப் பயன்படுத்தி சிகிச்சை வழங்கப்படும்.மனநலம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு ஹிப்னாடிசம் மற்றும் ரெய்கி முறையில் ஆலோசனைகள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு தொடா்பு கொள்ள செல்- 9443386129, 9600386129.
Next Story