பொத்தனூர் பகுளாமுகி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை.

பொத்தனூர் பகுளாமுகி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை.
X
பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர் பகுளாமுகி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பகுளாமுகி நகரில் அமைந்துள்ள பகுளாமுகி உடன் உறை ஸ்ரீ பசுபதீஸ்வரர் கோயிலில் சனி மகா பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக பகுளாமுகி அம்மன்,,பசுபதீஸ்வரர்,நந்தி தேவர் ஆகியவற்றிற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வண்ணமலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பகுளாமுகி அம்மனை அப்பகுதி பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Next Story