நாமக்கல் ஸ்ரீ பலப்பட்டரை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா; எம்பி, அமைச்சர், எம்எல்ஏ, மேயர் மற்றும் முன்னாள் அமைச்சர் உள்ளிட்டோர் சாமி தரிசனம்!!
கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை கிங் 24×7 யூ டியூப் சேனல் மற்றும் கேபிள் டிவியில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. மற்றும் கோவில் முன் எல்இடி திரையில் காண்பிக்கப்பட்டது.
நாமக்கல் மெயின் ரோட்டில் பிரசித்திபெற்ற பலப்பட்டரை மாரியம்மன் கோவில் உள்ளது. சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில், ஒவ்வொரு ஆண்டு மே மாதத்தில் தொடங்கி ஜூலை மாதம் வரை 3 மாதங்கள் விமரிசையாக தேர்த்திருவிழா நடைபெறுவது சிறப்பு ஆகும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றது. இதையொட்டி மகா கும்பாபிஷேக விழா கடந்த 13ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு மங்கள இசையுடன் துவங்கியது. தொடர்ந்து, மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோம் நடைபெற்றது. 9.30 மணிக்கு பக்தர்கள் தீர்த்தம் எடுத்துவர மோகனூர் காவிரி ஆற்றிற்கு புறப்பட்டு, காவிரியில் புனித நீராடி தீர்த்தக்குடங்களுடன் நாமக்கல் வந்தனர். நாமக்கல் ஐயப்பன் கோயிலில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். அன்று மாலை 6 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.14ம் தேதி சனிக்கிழமை காலை, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பகல் 12.40 மணிக்கு கோபுர கலசம் வைத்தல் மற்றும் அம்மன் பிரதிஷ்டை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இன்று ஞாயிற்றுக்கிழமை 15ம் தேதி அதிகாலை 5 மணிக்கு 4ம் கால யாகசாலை பூஜை துவங்கி மகா பூர்ணாஹூதியுடன் நிறைவு பெற்றது. பின்னர் அதிர்வேட்டுகள் முழங்க தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, முதலில் கோயில் கோபுரத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், ஸ்ரீ விநாயகர் மற்றும் ஸ்ரீ மாரியம்மன் மூலவருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மகா அபிசேகம், தச தரிசனம், மகா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், ராஜ்யசபா எம்.பி. K.R.N.ராஜேஷ்குமார், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி, முன்னாள் அமைச்சர் தங்கமணி, முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் விழாவில் கலந்துகொண்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.பக்தர்கள் அனைவருக்கும் நாமக்கல் கடைவீதி அருகில் உள்ள குளக்கரை திடலில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் ஆங்காங்கே பக்தர்கள் தாகம் தணிக்க நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், மெயின் ரோட்டில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாற்றியமைக்கப்பட்டது. நாமக்கல் ஏஎஸ்பி ஆகாஷ் ஜோஷி மேற்பார்வையில், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.பக்தர்கள் அனைவருக்கும் நாமக்கல் கடைவீதி அருகில் உள்ள குளக்கரை திடலில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் ஆங்காங்கே பக்தர்கள் தாகம் தணிக்க நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், மெயின் ரோட்டில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாற்றியமைக்கப்பட்டது. நாமக்கல் ஏஎஸ்பி ஆகாஷ் ஜோஷி மேற்பார்வையில், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை கிங் 24×7 யூ டியூப் சேனல் மற்றும் கேபிள் டிவியில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. மற்றும் கோவில் முன் எல்இடி திரையில் நேரலையில் காண்பிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை, திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் சேகர், அறங்காவலர்கள் இளங்கோவன், செல்வராஜ், லட்சுமி, கதிரேசன், செயல் அலுவலர் வினோதினி, திருப்பணிக்குழு நிர்வாகிகள் விஎம்ஆர் மணி, பாலசுப்ரமணியம், சரவணன் மற்றும் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
Next Story